வேண்டும்

வறியோர் அற்ற தேசம் வேண்டும்  - அதற்கு
இலவசம்  நிறுத்தி வேலை வேண்டும் !

கலைகளெலாம் கற்க வேண்டும்  - அதற்கு
கல்வி மட்டும் இலவசமாய் வேண்டும் !

நேர்செல்ல நெறி வேண்டும் - அதற்கு
கறைபடியா பாதை  வேண்டும் !

பன்மொழி பயில வேண்டும் - அதற்கு
தாய்மொழி முதலில் தெரிய வேண்டும் !

மீட்டு எடுத்த கவிதை

எழுதலாம் என்று எண்ணி மறந்த கவிதை!
எழுதலாம் என்று எண்ணி எழுதுகையில் கிடைத்தது! பிள்ளை போட்ட கோலமென
இணையாமல் நிற்கிறது!

மலை - மாசு

மனிதனின் மாசுப்புரட்சியில்
கடை வரிசையில் நிற்பது மலையே!
தேவையில்லா குப்பையின்
கிடங்காய் மாரிப்போன - கடல்!
மாற்று விதை
அதற்கு மருந்தென மறுத்துப்போன - மண்!
மண்டியிட மறுத்தாலும் மனிதனால்
மறக்கபட்டது மலை மட்டுமே!

மலை - உயர்ந்தது

மண்ணில் உயர்ந்தது மலையானாலும்
மனிதன் போல் தான் தோன்றித்தனமாய்
தலை கனம் கொள்வதில்லை!
ஆதலால் என்றும் மலை - உயர்ந்ததே!!

மலை - அடையாளம்

ஓ என்ற சிரிப்போ - அல்ல
விரித்த வெள்ளை கூந்தலோ!
அருவி உண்மையாக
பெண்மையின் - அடையாளம்.

மலை - வண்ணம்

வானின் நீலமோ
புவியின் பச்சையோ !
பிரிக்கமுடியாத வண்ண அற்புதம் - மலை!

மலை - இணைக்கும்

மலை வானுக்கும்
பூமிக்கும் ஒட்டி இருக்கும்
தொப்புள் கொடி.

காதலிக்கையில்

கூடுவிட்டு கூடுபாய முடிந்தால்
உன்னில் இருந்து - நான்
என்னை பார்க்கவேண்டும்
நீ சொல்வதை போல் உண்மையில்
நான் அழகா என்று!

ஆகச கோட்டை

உண்ணுவதாய் கனவு கண்டால் 

வயிறு நிறையுமோ! 


மலைமேல் ஏரிக்கொண்டால் 

வானத்தை தொட்டதாகுமோ!


பிள்ளை நடையால் 

பேரிடிதான் இடிக்குமோ!


கட்டை வண்டி ஏறினால்

காலம்தான் பின்னுக்கு போகுமோ!

வெளிச்சம்

பெண்ணிண் சிரிப்பில் இருக்கிறது -இல்லத்தின் வெளிச்சம்.

மௌனம் பாராட்டும்

மௌனம் பாராட்டும்
மழைபோல்
உன் சிரிப்பில் இனிக்கிறது
என் கவிதை

என் கவிதை

அன்றன்றைக்கே கிழிக்கபடாமால்
மொத்தமாய் கிழிக்கபடும்
சோம்பேரியின் நாட்காட்டியயை
போல!
தேங்கிய கனவுகளை
தாங்க முடியாது
உடைத்துக்கொண்டோடும் அணையை
போல!
தேக்கிய என் பேனா மை!
நனைக்கிறது என் காகிதத்தை!
இது தான் "என் கவிதை"!

கருப்பாம் வெள்ளையாம்

கனவுகள் கானும் போது
கருப்பா வெள்ளையா பார்க்க தெரியாது!
காதலும் ஒரு கனவு தான்!!

வான் வரையும் ஓவியம்

நீல வானம் இழைத்த
கருப்பு வெள்ளை ஓவியம்
மழை மேகம் !


கல்லூரி நாட்கள்

கல்லூரியில் கடந்து போன
வசந்த நாட்கள் 
மீண்டும் வரப்போவதில்லை  - என்று 
தெரிந்தே ஏங்கும் 
பிள்ளை மனம் பரவலாய் எல்லோர்க்கும் !