அன்பின் அலைகள் ❤️🌊

வெளியூர் செல்லும் பிள்ளைகள் 

கண்மறைந்ததும்

கல்மரம் ஆகிறார் தந்தை 


வீட்டை சேர்ந்ததும் 

மனைவியின் முதல் வார்த்தை 

வீடே வெறிச்சோடி கெடக்குது 


அஞ்சல் பெட்டிக்கு 

அன்புடன் என்றாவது

எழுத வேண்டும் 

ரயில் பெட்டிக்கு 

பயணம் ஏறினாலே போதும் 


ஒரே நேரத்தில் 

எத்தனை ஆயிரம் அன்பை 

கடத்தி செல்கிறது ரயில் பெட்டி 


திருச்சியா இல்ல திருச்செந்துரா 

எந்த ரெயில் - என்பதில் தொடங்கி 

ஆடா, கோழியா மதியத்துக்கு - என 

எல்லா கேள்விகளும் 

வெறிச்சோடிய வீட்டில் 


விசிறியடிக்கிறது 

அன்பை ❤️

கைமாத்து

இரண்டொரு நாளில் 

திருப்பிக்கொடுத்துவிடுங்கள் 

காதலையும், கடனையும்

கைமத்தாக இருந்துவிட்டு போகட்டும் 

கொடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள் 

என் நிழல் நீ

என் நிழலை 

நிழற்படம் எடுத்தால் - அது 

நீயாக மட்டும் இருப்பாய் 



தொலைத்தேன் - தேடித் தொலைந்தேன்

 மின்னலென என் கண்ணில் பட்டு

நொடியில் இறங்கினாய் விண்ணை விட்டு 


புருவங்கள் திருத்திய மையை தொட்டு 

வெற்றிலை நடுவே சாயமிட்டு 

என் கண்ணில் படுவாய் மறுமுறை 



காதலியே உன்னை காண திட்டமிட்டு 

திசை தெரியாமல் அலைகிறேன் 

அழகியே உன்னை அடைய 


கவிதை புரியாத கவிதைக்கு

 வரும் வழி யாவும் பனிமழை தூறும் 

அழகியே உன்னை நினைந்தால் 


விடிந்தும் விண்மீன் தெரியும்

காதலியே உன் முகம் சிரித்தால் 


உன்னை தவிர வேறு நினைவே இல்லை

உயிரே உன்னை பிரிந்தால்