Oh ho first love ha!

உன்னையே நெருங்க நெருங்க

உள்ளுக்குள் வெட்கம் beep அடிக்க


ஒளிந்து இருந்து இருந்து

தூறத்தில் உன்னை sight அடிக்க


Love, lust, crush ஏதோ Biology exam மாதிரி இருக்க

ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திடுச்சி


கண்ணுக்குள் நொழஞ்சி நொழஞ்சி

காதில் love bite கொடுக்க


வெரலு அசையிர தெசயுல

Heart-ல love  beat அடிக்க 


Bike, park, beach ஏதோ Cloud nine மாதிரி இருக்க

அந்த ஒருத்தி மண்டகுள்ள ஓடிகிட்டே இருக்கா


எதிர்ல நீதான்னு தெரிஞ்சதும் 

நரம்புக்குள vibration அடிக்க


பூக்கடையில நீ மறஞ்சதும் 

பூவுகெல்லாம் புது வாசம் கெடைக்க


எகிரிடுச்சி பூவேல 

IPO opening போல


வெய்யலுல உதவுர கைகுட்டைய

காதல் சின்னமா மாத்திட்டா

உன் வாசத்த கூட்டிகிட்டு

என் Pocket-ல மாட்டிகிடு

படுதாடி காதல் Duet -உ

நாட்டான் கண்ணன்

தூறத்துல கேக்குற பாட்டு சத்தம்
அத கேட்டபின்னாடி மனசு சுத்தும்

வானத்துல போற மேகக்கூட்டம்
வந்து வாசல நனச்சி கோலம் போடும்


வீட்டுல ஆடுற மத்து சத்தம்
மணி மாட்டு கழுத்துல ஆட்டம் போடும்

துள்ளி திரியுற மாட்டுக் கூட்டம்
கண்ணன் பாட்டை கேட்டதும் வீட்டை சுத்தும்

பூமி

புது சிறகை விரிக்கும்  சின்ன பறவை வாழவே
தன் இறையயை பகிரும் தாயும் இங்கு வாழவே
எல்லா உயிரும் எங்கும் ஒன்று சேர்ந்து வாழவே
அந்த வானம் ஒன்றுதான்
இந்த பூமி ஒன்றுதான்

போர் நிறுத்து
புகை குறைத்து
மனம் திறந்து   
இந்த உலகை காக்க வா

மண் கெடுத்து
மரம்  குறைத்து
பகை  விதைத்தது
போதும் மீண்டு வா

பாறைக்கு நடுவிலும் ஓர் வேர்முளைக்கும்
பூமிக்குள் வெடியை விதைக்கலாமா !
நம் நாடென்றும் என்றும் வலமாய் இருக்கும்,

நாம் ஒன்றாய் கை கோர்த்தால் அது நடக்கும் !

விடை தேடி ஓடும் அணிலின் கால்கள் பூமியில் 

விண்ணேறி ஓடும் மனிதன் வேர்கள் பூமியில்