பூமி

புது சிறகை விரிக்கும்  சின்ன பறவை வாழவே
தன் இறையயை பகிரும் தாயும் இங்கு வாழவே
எல்லா உயிரும் எங்கும் ஒன்று சேர்ந்து வாழவே
அந்த வானம் ஒன்றுதான்
இந்த பூமி ஒன்றுதான்

போர் நிறுத்து
புகை குறைத்து
மனம் திறந்து   
இந்த உலகை காக்க வா

மண் கெடுத்து
மரம்  குறைத்து
பகை  விதைத்தது
போதும் மீண்டு வா

பாறைக்கு நடுவிலும் ஓர் வேர்முளைக்கும்
பூமிக்குள் வெடியை விதைக்கலாமா !
நம் நாடென்றும் என்றும் வலமாய் இருக்கும்,

நாம் ஒன்றாய் கை கோர்த்தால் அது நடக்கும் !

விடை தேடி ஓடும் அணிலின் கால்கள் பூமியில் 

விண்ணேறி ஓடும் மனிதன் வேர்கள் பூமியில்