ஆம் நான் தண்டிக்கிறேன்

பேருந்தில் பயணப்படும் ஒரு பெண் 

கவிதை படிக்கிறாள் 

தலைப்பு : ஏன் தண்டிக்கிறேன்

நான் உன்னை மன்னிக்கலாம் !!

எதிரில் வருபவன் உன்னை பிரதிபலிக்கலாம்

அதனால் தண்டிக்கிறேன்.

 - மா காளி 

புதுப்பெண் அவதாரம் படைக்கிறாள்.



Backlogs

மலைப்பதற்கும் 

மலையாய் இருப்பதற்கும் 

இனி நேரம் இல்ல !

கைக்கு எட்டியதை பறிப்போம் 

மரத்தை முடித்துவிடலாம் !! 

இருப்பாய் விழிப்பாயை

இரவின் தூரம் விழித்தவனுக்கு

உணவின் ருசி பசித்தவனுக்கு

ஓவியம் தெரியும் ரசிப்பவனுக்கு

வாழ்க்கை புரியும் உழைப்பவனுக்கு

கரை சேரா கடல் நுரை

அவளைத் தேடியே

அங்கேயே நின்றேன்

பின்னிருந்து பிஞ்சு விரல் தொட்டது - திரும்பினேன்

நின்றாள் அவள் குழந்தையுடன்

முழித்தேன் நான் புன்னகையுடன்

நிழல்

நிழல் 

உண்மையின் உருவம்!

ஆனால்

உண்மையினும் உயரம்!

-rara