வயசு ஏறுது

நரை கொண்ட விதை பறக்கிறது 

நாரையை போல அல்ல 

நயமாய் 



வாழ்க்கையும் ஆசையும்

இருப்பு பாதையில் 

காது வைத்து கேட்க ஆசை - அடுத்த 

ரயில் எந்த திசையிலிருந்து 

வருமென்றுதான் தெரியவில்லை 

நானும் என் கற்பனையும்

கற்பனை சிறகு திறக்கும்போது 

நானும் சேர்ந்து பறக்கிறேன்.

சன்னலோர பேருந்து பயணம்போல 

அசயாமல் மிதக்கிறேன் 

மன்னிப்பது மறப்பதற்கே

மறப்பது மட்டுமே 

மனிதனுக்கு கொடுக்கப்பட்ட வரம் 

மன்னிப்பது -

மறக்க நினைப்பதற்கே போதும் 

தன்னந்தனியே தனிமைக்குள்

புரையேறி 

தண்ணிக்கு தவிக்கும் வரை 

மறந்தேபோய்விட்டேன் 

நான் தனிமையில் இருப்பதை