இருப்பவனுக்குத்தான் எல்லா பயமும்

பார்வையற்றவன் 

பயமின்றி நடக்கிறான்

மின்சாரம் அல்லா இறவில்


பணக்காரன்

பயத்திலே வாழ்கிறான்

பணம் ஆகும் செலவில்


இருப்பவன் பறிபோவதையும்

இல்லாதவன் வரப்போவதையும் - எண்ணி

பயணம் போகும் நனவில்

பாசம் விற்பனைக்கு

தலைப்பு : பாசம் விற்பனைக்கு

பக்கம் : 1

திருமணம் எனும் பந்த மாற்றத்தில்

பொய்கள் பறிமாறப்படுகின்றன

எதிர்பார்ப்புகள் ஏணி ஏறுகின்றன

பாசம் -

விற்பனைக்கு சூடுபிடிக்கின்றது.


காலம் தன் கால்களை ஒரே சீராக நகர்த்துகிறது, காலத்தின் பின்னே பயணப்படும் மனிதம் நேற்றினும் இன்று வேகமாக செல்கிறது. கடிகாரத்தில் சிக்காத மனிதன் தன் பால்ய காலத்தின் ஊடெ ஒட்டிக்கொள்கிறான். அப்படித்தான் "கண்ணன் அழகரும்" குழந்தை மனதை மாற்றிக்கொள்ள தெரியாதவன். தாயை இழந்த சில ஆண்டுகளாகவே இயல்பை விட அதிகமான தனிமையை பார்த்துவிட்டான். தனிமைத்துயரை நீக்க வாழ்க்கை துணை தான் ஒரே தீர்வு என்ற எண்ணம் வரும் வரையில், அவனும் ஒரு பேரழகிக்காகத்தான் கற்பனை வளர்திருந்தான். பள்ளியில் படிக்கும் போதும் இவனை நெருங்கிய காதல்களை அவன் ஏற்றுக்கொண்டதில்லை. இவன் விரும்பியவளோ இவனிடம் அளந்து அளந்து பேசினாள். பள்ளி ஆண்டு விழாவில் இவன் கண்ணன் நாடகம் போட்டால் ஒப்பனைச் செலவு மிச்சம். இவனுக்கு பெயர் காரணமோ என்னவோ அனெக பெண் பிள்ளைகளுக்கு இவன் தான் அன்பு நண்பன் , சிலருக்கு காதலன். 

எல்லாவற்றுக்கும் மாறாக கல்லூரியில் இவன் பெண்களிடம் பேசவே இல்லை, அவனுக்கு அது பழக்கமும் இல்லை. பெண்கள்தான் இவனுக்கான பேச்சை தொடங்குவார்கள். கல்லூரியில் ஆண் நட்பு வட்டாரம் அதிகம். உறுமும் பைக்கில் பறப்பது,  ஒவ்வொரு ஹோட்டேல்-களாய் ருசித்து பார்ப்பது என பட்டைய படிப்பும் முடிந்தது.

தான் நினைத்த வெள்ளை மேனியும், சிலுப்பி விட்ட கேசமும், சில்லெனும் இங்க்லிஷ் பேச்சும் தன் சமூக பெண்களிடம் பரவலாய் இல்லை என்பது மட்டும் ஓரளவுக்கு புரியவந்து விட்டது இவனுக்கு. சாதிகள் இல்லயடி பாப்பா என்ற பள்ளி பாடத்தில் இவன் வாங்கிய மதிப்பெண் வீணாகிப்போனது. ஓவ்வொரு சாதிக்கும் ஒரு திருமண தகவல் மையம் இருப்பது ஒருவழியாக இவனுக்கு வரும் ஆன்லைன் விளம்பரத்தில் இருந்து மட்டுபட்டுவிட்டது. 

வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் அவன் ஆசைபட்டது போல் பெண் ஒருத்தி சினேகிதியானாள். சுற்றி திரிந்தார்கள், காதல் வயப்பட்டார்கள், கடற்கரை சுற்றினார்கள். அவள் அண்ணன் திருமணத்திற்க்கு கொடுக்கபட்ட அழைப்பிதழில் ஆரம்பமாகியது அவன் காதலில் வேகத்தடை. வரவேற்புக்கு சென்றவன் கடைசியில் கண்டது; சாதி பேனர்களும், முறுக்கு மீசைகளும் தான். அந்த திருமண நிகழ்வுக்கு பிறகு அவளாகவே விலக ஆரம்பித்தாள். இந்த முறை இவனுக்கே காரணம் புரிந்துவிட்டது. ஆசைக்காதலி திருமண மண்டப கூட்டதிலிருந்து தனியாக இவனை மட்டும் அழைத்து உறவினரிடம் அறிமுகம் செய்தாள். அந்த நிமிடம் அவள் சித்தியின் ஒப்பனை பூசிய முகம் திடீரென சுருங்கி, ஒப்புக்கு சிரித்து விலகி சென்றது நினைவுக்கு வந்தது. இவளின் இன்றய அலுவலக முகமொழியும் அவள் சித்தியையே நினைவூட்டியது. பெண்ணோ, ஆணோ அடுத்தடுத்த நிலைக்கு மாறும்போது தன் முன்னோரையே பிரதிபலிக்கிறார்கள் அல்லது பெரியோரின் சொற்படி நடக்கிறார்கள்.

அடுத்தவனுக்காக சிந்திக்கையில் அவனால் கால மாற்றத்தை கணக்கிடமுடிகிறது, தனக்கெனும் போது தேவையை மறந்து ஆசை மட்டும் அதீதமாய் நிற்கிறது. எல்லோருக்கும் இந்த சலிப்பு நிலை இருக்கும். அம்மாவின் தட்டில் அவள் சுட்ட தோசை மொத்தமகவோ, இல்லை உதிரியகவோ இருப்பது போல். 

அவன் அப்பாவோ ஒய்வூதியம் பெருவது, அறிவுரை சொல்வது, சொன்ன விலைக்கு எந்த பொருளையும் வாங்குவது எnuம் சில குணங்களை தவிர வேரெதுவும் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை. தாயின் நிழலிலே வளர்ந்ததால் அனுபவத்தில் அப்பவை போலவே இவனும் இருந்தான். தாயின் பிறிவிற்கு பின்னர் நல்ல குணமான பெண் தேவை என்பதை மட்டும் வைத்துவிட்டு மற்ற வரிகளை திருமண தகவல்மைய தளத்திலிருந்து எடுத்துவிட்டான். 

பெண் பார்க்க சென்றாள், அவர்களின் கேள்விகள் எப்போதும் அவுட் ஆப் சிலபசிலே (out of syllabus) இருந்தது. உங்க முழு பெயரே அழகரா? என்பதை தவிர எதிர்பட்ட அனைத்து கேள்விகளும் இவனுக்கு புதுசு. 

உங்களுக்கு கட்லெட் (Cutlet) செய்ய தெரியுமா?

உங்க பாங்க் பாலன்ஸ் (Bank balance) எவ்வளவு?

இண்டர் நேஷ்னல் டூர் (International tour) போவிங்கலா?

நீங்க ஏன் யு.ஸ் (U.S) இன்னும்  போகல?

எப்போவுமே அப்பா பேச்ச கேட்டு தான் முடிவு எடுப்பிங்களா?

அவர்களின் இத்தனை கேள்விகளுக்கும் இவன் என்ன சொல்வதென முழிக்கையிலே பலர் புறபட தயாராகி இருப்பார்கள் அல்லது ஆடர் செய்த உணவு இன்னும் வரவில்லையே என்று வெய்ட்டர்காக (Waiter)  காத்திருப்பார்கள்.

பக்கம் : 2

டிரான்சிச்டர் - ரேடியோ - தொலைகாட்சி - கணினி - கைபேசி - திறன்பேசி - சி.சி.டி.வி

இவைகளின் தோன்றலுக்கு இடைப்பட்ட காலஅளவு ஒன்றினும் மற்றொன்று குறைவு. அதாவது என் தாத்தா டிரான்சிச்டர் காலம் அவர் சிலோன் கேட்டார் - ரேடியோ என் அப்பா காலம் அவர் டெல்லி அஞ்சல் கேட்டார். சித்தப்பா தொலைக்காட்சியில் தூர்தர்ஷன் பார்த்தார். நான் கணிணியில் சீ.டி தட்டுகளில் உலகலாவிய திரைப்படம் பார்த்தேன் மற்றும் கைபேசியில் பிக்சர் மெசேச் அனுப்பினேன். இன்று என் மகன் திறன்பேசில் என்ன பார்கிறான் என்பது புரியாமல், அவன் திறன்பேசி உபயோகிக்கிறான் என்பதை மட்டும் சி.சி.டி.வி யில் பார்க்கிறேன். யாரோ ஒருவரின் குரலை டிரான்சிச்டரில் கேட்க பட்டபாடு, சி.சி.டி.வி யில் தனக்கானதை எந்த தொலைவிலிருந்தும் காண இயல்வது இயல்பாகிவிட்டது. இந்த உபயோக பயன்பாடு வெரும் 30 ஆண்டுக்குள் என்பது அறிவியலின் வேகம். அறிவியல், விஞ்ஞான சிந்தனைகள் ராக்கேடின் மீதும்; சாதி, மத பழக்கங்கள் நத்தையின் மீதும் ஏற்றப்பட்டு சிந்தனை வளர்த்தெடுக்கப்பட்டுகிறது.


இந்த படம் நமது பால்வீதி அண்டத்தின் விரிவினை விளக்கும் அறிவியல். மஞ்சள் நிற குறியீட்டு விளக்கம் ஒரு பிபனாச்சி சுருள் (Fibonacci). இந்த சுருளின் மையம் ஆரம்பம் எனும் போது, பிரபஞ்ச விரிவு அந்த செவ்வக விளிம்பைத் தொட எடுத்துக்கொண்ட கால அவகாசம் வெரும் மூன்று அடுக்குளே. கடிகார துடிப்பின் இடைவெளி ஒன்றaயினும், கால விரிவு என்பது அறுதியிட முடியாதது. இதே போன்றதொரு வளர்ச்சியை தான் நாம் கண்டுகொண்டு இருக்கிறோம்.



இந்த மாற்றத்தை உணர்பவன் ஊரோடு வாழ்கிறான், மற்றவன் ஊருக்கு கதையாகிறான்.

நாம் அடுத்த மனிதனின் மீது வைக்கும் அதிகபடியான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தரவல்லது. கணிதத்தில் நிகழ்தகவு (Probability) என்பது "ஒரு நிகழ்ச்சி நிகழவல்ல வாய்ப்பின் அளவை குறித்து கணக்கிடும் முறை". அதன் கூற்றின் படி வாய்ப்புகள் "சரி" (1) அல்லது "தவறு" (0) என்று கொண்டாள், நிகழப்போகும் நிகழ்வு உத்தேசித்ததற்கு நெருக்கமாக வர 50 விழுக்காடு வாய்ப்பு உள்ளது. ஓரு ஆண், பெண்ணின் மீது திருமணதின்பால் வைக்கும் எதிர்பார்பின் நிகழ்தகவு எதிர்படும் பெண்ணுக்கு இருக்கும் வாய்ப்பு, புரிதல், உணர்வு, நம்பிக்கை, விருப்பம், வசதி, பழக்கம் மற்றும் இயல்பு என பல காரணிகளைக் கொண்டு அமைவதால்; எதிர்பார்ப்பு என்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல. (இது எழுதபட்ட 2022 ஆண்டு காலகட்டதில்). 


மலையும் , பறவையும்

காற்றை வளைக்கின்றது.

பறவை மேலே பறக்கிறது,

மலை மழையை கொடுக்கிறது.


வளைக்கும் வல்லமை, யாவர்க்கும் வாய்ப்பதும் இல்லை, அப்படியே முடிந்தாலும் விளைவு வேறுபடும். காற்றைப்போல் வளைபவை நாற்றத்தை கடந்து சென்றுகொஂண்டிருக்கும். 


தொலைவில் நட்சத்திரம் மின்னுவது அழகு

நெருங்கினாள் அதுவும் நெருப்பு.


இயல்பை உணர்வோம், ஆனந்தமாய் இருபோம்!  ஊரை சுற்றிக்கொண்டும், இலைகளை அசைத்துக்கoண்டும் காலத்தோடு பயணிப்போம் -  காற்றைப்போல.